திருவள்ளூர்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலால் உதவி ஆணையர் வரதராஜன் தலைமை வகித்தார். கலால் பிரிவு இன்ஸ்பெக்டர் புகழ் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கல்லூரியின் தலைவர் கே.வாசுதேவன் பங்கேற்று பேசியது: போதைப் பாக்குகள், புகையிலைகள் ஆகிய தீய பழக்கங்கள் இளைஞர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடுகிறது.
இதுபோல் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் இளைஞர்கள் வாழ்வில் தங்களது லட்சியத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் உடற்பயிற்சியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.