மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.36.53 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள்

கருணாகரச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 137 பயனாளிகளுக்கு ரூ.36.53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துல்ரஹீம்
Published on
Updated on
1 min read

கருணாகரச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 137 பயனாளிகளுக்கு ரூ.36.53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துல்ரஹீம் வழங்கினார்.

திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி வட்டத்துக்கு உள்பட்ட கருணாகரச்சேரியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார். திருவள்ளூர் கோட்டாட்சியர் அபிராமி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம் பங்கேற்று 13 பயனாளிகளுக்கு மாதாந்திர முதியோர் உதவித்தொகை ஆணைகள் மற்றும் 137 பயனாளிகளுக்கு ரூ.36 லட்சத்து 53 ஆயிரத்து 550 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் மாவட்ட ஆட்சியர் பேசியது: இம்மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் திருந்திய நெல் சாகுபடி செய்திட சிறப்பான கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தமிழக முதல்வரின் சிறப்பு திட்டத்தின்கீழ் கறவை மாடுகள், ஆடுகள் வழங்கப்படுவதால் ஏழை எளியோரின் வாழ்க்கைத் தரம் உயாந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 950 கறவை மாடுகள், 5 ஆயிரத்து 200 யூனிட் வெள்ளாடுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கிராமத்தில் 26 யூனிட் வெள்ளாடுகள் வீதம் 104 வெள்ளாடுகள் வழங்கப்பட்டன. இன்றைய அளவில் அது 130 குட்டிகளாக உள்ளது. இதுபோல மாவட்டம் முழுவதும் ஏழை எளிய மக்கள் பயனடைந்துள்ளனர்.ற

மாணவர்களின் திறனை வளர்க்க அட்லஸ் புத்தகமும், 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 20 ஆயிரம் லேப்டாப்கள் வழங்கப்படுகின்றன. முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 23 ஆயிரம் பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் ரூ.55 கோடி செலவிடப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கையாக 226 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இக்கிராமத்துக்கு தேவையான போர்வெல், அங்கன்வாடி கட்டடம், சமுதாயக்கூடம் ஆகியவை விரைவில் கட்டித் தரப்படும் என்றார் அவர்.

முகாமில் அமைக்கப்பட்டிருந்த பல்துறை பணிவிளக்கக் கண்காட்சியை அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் பார்வையிட்டனர்.

கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை, பொது சுகாதாரம், கல்வித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல துறைகளின் அரசு திட்டங்கள் குறித்து புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் பரந்தாமன், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் ரவிந்திரநாத், ஊராட்சிமன்றத் தலைவர் பக்தவச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூந்தமல்லி வட்டாட்சியர் ஆஷா நன்றி

கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com