செங்குன்றத்தை அடுத்த புள்ளிலைன் ஊராட்சியில் ஆர்.பி.கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறையின் தேசியக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை இருப் பிரிவுகளாக நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் இல.கோமதி வரவேற்றார். கருத்தரங்கத்தின் முக்கியத்துவம் குறித்து கல்லூரித் தாளாளர் விகாஸ் சுரானா பேசினார். விழாவின் முதல் அமர்வுக்கான சிறப்புரையை தொழில்நுட்ப வடிவமைப்பாளர் கண்ணன் சுவாமிநாதனும், மாநிலக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் ஜோதி வெங்கடேஷ்வரனும் அமர்வின் தலைமை உரையை நிகழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
மேலும் 2-ஆம் அமர்வில் செயின்ட் பீட்டர்ஸ் தொழில்நுட்பக் கல்லூரிப் பேராசிரியர் துறைத் தலைவர் டாக்டர் லதாவின் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆர்.பி.கோத்தி ஜெயின் கல்லூரியின் பி.சி.ஏ., துறைத் தலைவர் உஷா மாதுரி நன்றி கூறினார்.
கருத்தரங்கின் 2-ஆம் பகுதியில் ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்த பல்வேறு கல்லூரி விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களை, விப்ரோ டெக்னாலஜிஸ்ஸின் தொழில்நுட்ப ஆலோசகர், சுஜாதா அனந்த கிருஷ்ணன் வாழ்த்தினார்.
கல்லூரித் தாளாளர் விகாஸ் சுரானா, 67 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய மலரை வெளியிட்டு அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவர் காயத்ரி நன்றி கூறினார். இந்த அரங்கில் கல்லூரிப் பேராசிரியைகள், மாணவிகள், கணினித் துறை தொழில்நுட்ப வல்லுநர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.