Enable Javscript for better performance
அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழா- Dinamani

சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஐயர் கண்டிகை பகுதியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் கடந்த 48 நாளாக நடைபெற்று வரும் மண்டலாபிஷேகத்தின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கெட்ணமல்லி ஊராட்சியைச் சேர்ந்த ஐயர் கண்டிகை பகுதியில் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் உள்ளது.

    இந்த கோயிலில் மண்டலாபிஷேகம் கடந்த 48 நாள்களாக நடைபெற்று வந்த நிலையில் அதன் நிறைவு விழா கோலாகலமாக ஐயர் கண்டிகையில் நடைபெற்றது. விழாவை ஒட்டி அங்காளம்மன், பெரியாயி, நாகவல்லி, நவகிரகம் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் சிறப்பு அபிஷேகமும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி திருவீதி உலா நிகழ்வும் நடைபெற்றது. வாணவேடிக்கை, தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த மண்டலாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயிலின் நிர்வாகி இ.குமார் உள்ளிட்டோர் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai