Enable Javscript for better performance
அரசியலில் ஓரங்கட்டப்பட்டவரை எம்.எல்.ஏ. ஆக்கினார் விஜயகாந்த்: பிரேமலதா விஜயகாந்த் - Dinamani

சுடச்சுட

    

    அரசியலில் ஓரங்கட்டப்பட்டவரை எம்.எல்.ஏ. ஆக்கினார் விஜயகாந்த்: பிரேமலதா விஜயகாந்த்

    Published on : 27th March 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டு எந்தவித அடையாளமும் இல்லாமல் இருந்தவரை ஆலந்தூர் சட்டப்பேரவை உறுப்பினராக்கினோம். ஆனால் அவரோ ஓய்வு பெறுவதாகக் கூறி அதிமுகவில் சேர்ந்து துரோகம் இழைத்துவிட்டார் என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

    தேமுதிக, மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டார்.

    ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்குப் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஏ.எம்.காமராஜ் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் மாசிலாமணி ஆகியோரை ஆதரித்து போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பிரேமலதா பேசியதாவது: அரசியலில் ஓரம் கட்டப்பட்டு எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தவரை ஆலந்தூர் சட்டப்பேரவை உறுப்பினராகி அழகுப் பார்த்தவர் விஜயகாந்த்.

    ஆனால் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி விலகிச் சென்று அதிமுகவுடன் சேர்ந்து விட்டார்.

    எனவே நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் ஆலந்தூர் தொகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றால் இங்கு நிலவும் குடிநீர்ப் பிரச்னை மற்றும் பாதாள சாக்கடை, மழைநீர், கழிவுநீர் கால்வாய்கள், தரமான மருத்துவமனை, பள்ளிக் கூடங்கள் அமைத்து கொடுக்கப்படும்.

    மாவட்டம்தோறும் தொழிற்சாலைகள் தொடங்கி வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். தமிழ்நாட்டில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறை சரி செய்யப்படும்.

    எனவே ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் மாசிலாமணிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என பேசினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai