Enable Javscript for better performance
திருவள்ளூரில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை: பிரேமலதா குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூரில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை: பிரேமலதா குற்றச்சாட்டு

    Published on : 27th March 2014 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் 3 அதிமுக அமைச்சர்கள், ஒரு எம்.பி. இருந்தபோதிலும் இங்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை என பிரேமலதா குற்றம்சாட்டினார்.

    மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் யுவராஜை ஆதரித்து மீஞ்சூரில் பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கிழமை இரவு பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பேசியது: திருவள்ளூர் மாவட்டத்தில் 3 அதிமுக அமைச்சர்கள், 1 எம்.பி. இருக்கின்றனர். இருப்பினும் இம்மாவட்டத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    ஆட்சிக்கு வந்த பின்னர், இதுவரை எந்த திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை.

    மத்தியில் ஊழலற்ற நிலையான ஆட்சியை நரேந்திரமோடி மட்டுமே தர முடியும்.  நரேந்திரமோடியை போல முதல்வர் ஜெயலலிதாவும் எம்.பி. தேர்தலில் போட்டியிட முடியுமா?

    இந்தியாவிலேயே ரூ.10-க்கு குடிநீரை விற்பனை செய்தது அதிமுக மட்டும்தான்.  தமிழக மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதை நிறுத்திவிட்டு, மாறாக இலவசக் கல்வி, தடையற்ற மின்சாரம், 24 மணிநேர குடிநீர் வசதி, மருத்துவம் ஆகியவற்றை வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் ஏராளமான டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர் என்றார் அவர்.

    பாஜக,  பாமக,  மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai