Enable Javscript for better performance
தி.மு.க.வின் சாதனைக் கூறி வாக்குச் சேகரிக்க வேண்டும்: ஊராட்சி தி.மு.க. செயலர்- Dinamani

சுடச்சுட

    

    தி.மு.க.வின் சாதனைக் கூறி வாக்குச் சேகரிக்க வேண்டும்: ஊராட்சி தி.மு.க. செயலர்

    Published on : 27th March 2014 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    10 ஆண்டுகளாக இந்த தொகுதிக்கு திமுக எம்.பி. செய்த சாதனைகளையும், கடந்த 5 ஆண்டுகளாக இருந்த அதிமுக எம்.பி. எதையும் செய்யாததையும் கூறி வாக்குச் சேகரிக்க வேண்டும் என நேமள்ளூர் ஊராட்சி திமுக செயலர் கூறினார்.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த நேமள்ளூர் ஊராட்சி தி.மு.க. சார்பில் அப்பகுதி மாந்தோப்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு நேமள்ளூர் ஊராட்சி தி.மு.க. செயலர் ஜி.மனோகரன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி மன்றத் தலைவர் மாலா சேகர், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி தேவி ராமசந்திரைய்யா, ஊராட்சி தி.மு.க. துணைத் தலைவர் ஜி.கருணாகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் வெங்கடாசலபதி கலந்து கொண்டார். கூட்டத்தில் நேமள்ளூர் ஊராட்சி மன்றத் தலைவர், கவுன்சிலர், துணைத் தலைவர், ஊராட்சியில் மொத்தமுள்ள 9 வார்டு உறுப்பினர்கள் என்று மக்கள் பிரதிநிதிகள் அனைவருமே கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் பேசிய ஊராட்சி தி.மு.க. செயலர் மனோகரன், "இதற்கு முன்பு 10 ஆண்டுகள் எம்.பி. ஆக இருந்த கிருஷ்ணசாமி செய்த சாதனையையும், கடந்த 5 ஆண்டு அ.தி.மு.க. எம்.பி. எந்தவித சாதனையையும் செய்யவில்லை என்பதையும், தி.மு.க. ஆட்சியில் நேமள்ளூரில் 350-க்கும் மேல் இலவச வீட்டு மனைப் பட்டா, 176 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டதையும், அ.தி.மு.க. ஆட்சியில் 4 பேருக்கு பட்டா, 12 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டதை ஒப்பிட்டு பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பதோடு படித்த பண்பாளரான வேட்பாளர் ரவிக்குமாருக்கு 9 வார்டுகளிலும் மொத்தமாக அனைவரும் வாக்களிக்க செய்யும் வகையில் வீடு வீடாக சென்று வாக்குச்  சேகரிக்க வேண்டும்' என்றார். கூட்டத்தில் தி.மு.க ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் பிரசூன், காமராஜ், கோதண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai