Enable Javscript for better performance
தீர்த்தீஸ்வரரின் ஹம்ச வாகன உற்சவ ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ தீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி நடைபெற்ற ஹம்ச வாகன ஊர்வலத்தில் வழிநெடுகிலும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இக் கோயிலின் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா 24-ஆம் தேதி முதல் தொடங்கியது.

    இதையொட்டி தினந்தோறும் உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    புதன்கிழமை காலை உற்சவர் சிம்ம வாகனம், அம்ச வாகனத்தில் எழுந்தருளி திருவள்ளூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதையொட்டி திருவள்ளூர் குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்குராஜ வீதி, மோதிலால் தெரு உள்ளிட்ட தெருக்களில் திரளான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai