Enable Javscript for better performance
வாக்களிக்க வலியுறுத்தி ரூ.5 லட்சத்தில் விளம்பர இயந்திரங்கள்- Dinamani

சுடச்சுட

    

    வாக்களிக்க வலியுறுத்தி ரூ.5 லட்சத்தில் விளம்பர இயந்திரங்கள்

    By dn  |   Published on : 27th March 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத் தேர்தல் அலுவலகம் சார்பில், பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ரூ. 5 லட்சம் செலவில் நவீன விளம்பர இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ன.

    நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள மக்களுக்கு வாக்களிப்பது குறித்த முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அவசியத்தை வலியுறுத்தியும் மாவட்டத் தேர்தல் அலுவலகம் சார்பில் பல லட்சம் செலவில் விளம்பர சுவரொட்டிகள், ஸ்டிக்கர்கள் ஆகியவை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் பெரிய டி.வி. திரை அமைக்கப்பட்டு அலுவலக நேரங்களில் அதில் தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரூ.5 லட்சத்தில் மக்களைக் கவரும் வகையில் நவீன விளக்கு அமைப்புகளுடன் கூடிய சுழலும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற விளம்பரங்கள் மூலம் இம்மாவட்டத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் வழக்கமாக நடைபெறும் 70 முதல் 80 சதவீத வாக்குப் பதிவில் இருந்து வாக்களிக்கும் சதவீதம் 100 ஆக அதிகரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கொ. வீரராகவ ராவ் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai