Enable Javscript for better performance
வாக்கு சேகரிக்க வந்த அமைச்சரிடம் பஸ் வசதி கோரி முறையீடு- Dinamani

சுடச்சுட

    

    சோழவரம் ஒன்றியத்தில் உள்ள கிருதலாபுரம் கிராமத்தில் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வேணுகோபாலுக்கு வாக்குச் சேகரிக்க வந்த அமைச்சர் மூர்த்தியிடம் அப்பகுதி மக்கள் பஸ் செய்து தரக் கோரி முறையிட்டனர்.

    திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள சோழவரம் ஒன்றியத்தில் பால்வளத் துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, அதிமுக வேட்பாளர் வேணுகோபாலுக்கு ஆதரவாக ஒரக்காடு, காரனோடை, நெற்குன்றம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தார்.

    அப்போது ஒரக்காடு ஊராட்சியில் உள்ள கிருதலாபுரம் கிராமத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ. தூரமுள்ள புதூர் சென்று அங்கிருந்து பஸ் ஏறிச் சென்று வருவதாக தெரிவித்தனர்.

    அத்துடன் பஸ் வசதி இல்லாததால் இப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு பள்ளிக்குச் சென்று வருவதாக தெரிவித்தனர்.

    இதை கேட்ட அமைச்சர் வி. மூர்த்தி, கோரிக்கை குறித்து மனுவாக எழுதி தரும்படியும், அதன்பேரில் பஸ் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai