Enable Javscript for better performance
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: 50,140 பேர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு  பொதுத் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவர ராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    திருவள்ளுர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 136 தேர்வு மையங்கள் தேர்வு இயக்குநரால் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 24 ஆயிரத்து 271 மாணவர்களும், 25 ஆயிரத்து 869 மாணவிகள் உள்பட மொத்தம் 50 ஆயிரத்து 140 பேர் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர்.

    தேர்வுக்காக இம்மாவட்டத்தில் 18 வினாத்தாள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வினாத்தாள் கட்டுக் காப்பாளர்களாக 36 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இத்தேர்வில் காப்பி அடித்தல், பிட் அடித்தல் போன்ற முறைகேடுகள் நிகழாவண்ணம் கண்காணிக்க முதன்மைக் கண்காணிப்பாளர், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், உதவிக் கண்காணிப்பாளர் என 3 ஆயிரத்து 400 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும, 330 சிறப்புப் பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அங்கு மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.

    முதல்முதலில் திருவள்ளூரை அடுத்த வெள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி அடுத்தடுத்துள்ள சில தேர்வு மையங்களை ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மாவட்டக் கல்வி அலுவலர் காஞ்சனா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    திருத்தணியில்...

    திருத்தணி, மார்ச் 26: ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வை பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர்.

    மாணவர்களின் வசதிக்காக தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளில் தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்ய ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டது.

    இப்பள்ளியில் சிவாடா, பூனிமாங்காடு, அருங்குளம், முருக்கம்பட்டு, நெமிலி, தளபதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 534 பேர் தமிழ் முதல் தாள் தேர்வை எழுதினர்.

    அதேபோல் திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் 291 மாணவிகள் தேர்வு எழுதினர்.

    பறக்கும் படை

    தேர்வில் காப்பி அடிப்பது போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களை பிடிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் தலைமையில், மாவட்டக் கல்வி அலுவலர் காந்திமதி மேற்பார்வையில் திருத்தணி, மத்தூர், கே.ஜி.கண்டிகை, கனகம்மாசத்திரம், ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் ஆகிய பள்ளிகளிலும் பறக்கும் படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai