சுடச்சுட

  

  உள்ளாட்சிகளில் காலிப் பதவிகளுக்கு செப். 18-இல் தாற்காலிக தேர்தல்

  By திருவள்ளூர்,  |   Published on : 01st September 2014 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளுர் மாவட்டத்தில், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட காலி பணியிடங்களுக்கு செப்டம்பர் 18-ஆம் தேதி தாற்காலிக தேர்தல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த மாவட்டத்தில், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட காலிப் பதவி இடங்கள் உள்ளன.

  இந்த இடங்களுக்கு தாற்காலிக தேர்தல் நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சட்டப்பூர்வ ஆணையை வெளியிட்டுள்ளது.

  அதன்படி, இந்த மாவட்டத்தில் ஆவடி நகராட்சி 33-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கும், ஊரகப் பகுதிகளில் பூண்டி ஒன்றிய 14-ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கும், எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த கன்னிகைப்பேர் ஊராட்சி, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த ஏ.என்.குப்பம், ஏடூர் ஊராட்சிகள், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அனுப்பம்பட்டு ஊராட்சி, பள்ளிப்பட்டு ஒன்றியத்தைச் சேர்ந்த திருமல்ராஜ்பேட்டை ஊராட்சி, பூந்தமல்லி ஒன்றியத்தைச் சேர்ந்த திருமணம் ஊராட்சி, பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த மொன்னவேடு ஊராட்சி, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த அஸ்வரேவந்தபுரம் ஊராட்சி, திருவாலங்காடு ஒன்றியத்தைச் சேர்ந்த பூனிமாங்காடு, இலுப்பூர் ஊராட்சிகள், திருவள்ளுர் ஒன்றியத்தைச் சேர்ந்த அரண்வாயல், கீழானூர் ஊராட்சிகள், கடம்பத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த நரசிங்கபுரம் ஊராட்சி உள்பட மொத்தம் 13 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 53 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் காலிப் பதவி இடங்களுக்கு செப்டம்பர் 18-இல் தாற்காலிக தேர்தல் நடைபெற உள்ளது. மேற்குறிப்பிட்ட தாற்காலிக தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 4 வரை அலுவலக வேலை நாள்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சம்மந்தப்பட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

  பெறப்பட்ட வேட்பு மனுக்கள், செப்டம்பர் 5-ஆம் தேதி காலை 11 மணியளவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்புமனு செப்டம்பர் 8-ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை திரும்பப் பெறப்படும். போட்டியிருப்பின் வாக்குப் பதிவு செப்டம்பர் 18-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

  இந்தத் தாற்காலிகத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 22-ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் நடைபெறும் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai