சுடச்சுட

    

    ஊத்துக்கோட்டை, பூண்டியில் அதிமுகவினர் கொண்டாட்டம்

    By ஊத்துக்கோட்டை  |   Published on : 01st September 2014 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளராக 7-ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றித் தெறிவித்து ஊத்துக்கோட்டை, பூண்டி ஒன்றியத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

    கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை வெள்ளிக்கிழமை ஒருமனதாக தேர்ந்ததெடுக்கப்பட்டதாக, அதிமுக தேர்தல் ஆணையர் விசாலாட்சி நெடுஞ்செழியன் முறைப்படி அறிவித்து, அதற்கான சான்றிதழை அவரிடம் வழங்கினார்.

    அதற்கு நன்றித் தெரிவித்தும், அதை கொண்டாடும் விதமாக ஊத்துக்கோட்டை பேரூர் நகரச் செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும், பேருந்துப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

    உடன், பேரூராட்சி துணைத் தலைவர் ஷேக்தாவூத், கூட்டுறவு சங்கத் தலைவர் சிவக்குமார், வார்டு உறுப்பினர்கள் செல்வராஜ், சக்திவேல், அண்ணாதுரை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பூண்டி ஒன்றியம் சார்பில், பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஒன்றியச் செயலாளரும், ஒன்றிய குழுத் துணைத் தலைவருமான கந்தசாமி, ஒன்றியக் குழுப் பெருந்தலைவர் அம்மு மாதவன் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

    உடன், மாவட்ட உறுப்பினர்கள் வெங்கட்ரமணா, தமிழ்செல்வி ரஜினி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் அம்புரோஸ், பி.எம்.பிராசாத், மது, பூண்டி தாஸ் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் எத்திராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai