Enable Javscript for better performance
கார் - வேன் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    திருத்தணி அருகே ஞாயிற்றுக்கிழமை காரும், வேனும் நேருக்கு நேர் மோதியதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

    சென்னை மூலக்கடையைச் சேர்ந்தவர்கள் லலிதா (62), சுசிலா (25), ரோசி (45), டேவிட் (18). இவர்கள் 4 பேரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் கார் மூலம் கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றனர்.

    அங்கு பிரார்த்தனையை முடித்துவிட்டு, அதே காரில் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஜெகநாதன் (37) என்பவர் காரினை ஓட்டினார்.

    பிற்பகல் 3 மணியளவில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணியை அடுத்த காசிநாதபுரம் கூட்டுச் சாலை அருகே சென்றபோது, திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்த வேன் மீது அவர்களின் கார் மோதியது.

    இதில், காரில் பயணம் செய்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை, அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அவர்களில் லலிதா, சுசிலா, ரோசி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து குறித்து திருத்தணி போலீலார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai