சுடச்சுட

  

  கிருபானந்தவாரியார் பஞ்சலோக சிலை அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

  By திருவள்ளூர்,  |   Published on : 01st September 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூரை அடுத்த பூங்கா நகரில் உள்ள சிவ விஷ்ணு கோயிலில் உள்ள

  ஸ்ரீஜலநாராயணப் பெருமாள் சன்னதியில் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமி பஞ்சலோக சிலை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலையில் விநாயகர் பிராத்தனை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணா ஹூதி, கலசாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  இதனைத்தொடர்ந்து, சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம், யாகசாலை ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றன.

  இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் இரண்டாம் காலயாக பூஜை, அவப்ரத யாகம், மஹா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் ஆகியவை நடைபெற்றன. காலை 11 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  மாவட்ட எஸ்.பி. சரவணன், டி.எஸ்.பி. சந்திரசேகர், காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai