சுடச்சுட

  

  தந்தை, சகோதரர் கொலை:இளைஞர் உள்பட 6 பேர் கைது

  By பூந்தமல்லி  |   Published on : 01st September 2014 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பூந்தமல்லி அருகே தனது தந்தை, சகோதரரை கொலை செய்த இளைஞர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் கடந்த 27-ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தது செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணி என்பது தெரியவந்தது.

  இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு, செம்பரம்பாக்கம் கற்பகவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த குமார் (31) என்பவர், ஒருவரை கொலை செய்துவிட்டதாக மதுபோதையில் பேசியுள்ளார். இதுகுறித்து அப்பகுதியினர் நசரத்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  இதையடுத்து, குமாரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மணியை கொலை செய்ததை குமார் ஒப்புக்கொண்டார். மேலும், மணியின் இளைய சகோதரர் தியாகராஜன் (30) கூறியதால்தான் அவரைக் கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தியாகராஜனுடன் சேர்ந்து அவரது தந்தை தேவராஜையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கொலை செய்ததாகவும் போலீஸாரிடம் குமார் கூறினார்.

  இதையடுத்து போலீஸார் குமாரை கைது செய்தனர். மேலும் தியாகராஜன், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் பவானி, சகோதரி பாரதி, பாரதியின் கணவர் செல்வம், கார் டிரைவர் சரவணன் ஆகிய 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

  விசாரணையில், மணியும், தேவராஜும் தினமும் சேர்ந்து குடித்துவிட்டு சாலையில் கிடப்பதால் அவமானம் தாங்க முடியாமல் அவர்களைக் கொலை செய்ததாக தியாகராஜன் போலீஸாரிடம் கூறியதாக தெரிகிறது.

  கைது செய்யப்பட்ட தியாகராஜன், செம்பரம்பாக்கம் ஊராட்சித் துணைத்தலைவரின் கணவர் ஆவார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai