சுடச்சுட

  

  திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  திருவள்ளூரை அடுத்த ராஜாஜிபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் மோகன்குமார் (50).

  இவரது வீட்டில் இந்து அறநிலையத் துறை அலுவலர் புருஷோத்தமன் என்பவர் குடியிருந்தார்.

  கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவருக்கு திருச்சியில் பணி மாறுதல் கிடைத்ததால் வீட்டை காலி செய்துவிட்டு வியாழக்கிழமை திருச்சிக்குச் சென்றுள்ளார்.

  இதையொட்டி, அந்த வீடு பூட்டப்பட்டு கிடந்தது.

  இந்நிலையில், சனிக்கிழமை இரவு, மர்ம நபர்கள் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

  உள்ளே பொருள்கள் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பினர். இதுகுறித்து மோகன்குமார் கொடுத்த தகவலின் பேரில் டவுன் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai