சுடச்சுட

  

  திருவள்ளூர் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டிருந்த சிலைகள் பிரம்மாண்ட பேரணியாக கொண்டு செல்லப்பட்டு, காக்களூர் ஏரியில் கரைக்கப்பட்டன.

  விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருவள்ளூர், சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டு வந்தன.

  இதையடுத்து, அந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் திருவள்ளூரை அடுத்த ஆயில்மில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை கொண்டு வரப்பட்டு வரிசையாக நிற்க வைக்கப்பட்டன.

  மொத்தம் 35-க்கும் மேற்பட்ட சிலைகளுடன் பிரம்மாண்ட பேரணி, மாலை 5 மணியளவில் புறப்பட்டன. மேள, தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடிக்கப்பட்டு ஆடல், பாடல்களுடன் பக்தர்கள் பேரணியாக சென்றனர்.

  ஆயில் மில் பகுதியில் இருந்து புறப்பட்ட இந்தப் பேரணி, ஜே.என்.சாலை வழியாக திருவள்ளூர் வந்து அங்கிருந்து ராஜாஜி சாலை, தேரடி, குளக்கரை வீதி, பஜார் வீதி, மோதிலால் தெரு வழியாக காக்களூர் சாலைக்குச் சென்று அங்குள்ள காக்களூர் ஏரியில் சிலைகள் கரைக்கப்பட்டன.

  பேரணியையொட்டி, வழி நெடுகிலும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

  திருத்தணியில்... திருத்தணி நகராட்சியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஞாயிற்றுக்கிழமை மாலை நீர்நிலைகளில் பக்தர்கள் கரைத்து வழிபாடு செய்தனர்.

  பின்னர், விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, நந்தி ஆறு, காந்தி நகரில் உள்ள நல்லதண்ணீர் குளம், மேல்திருத்தணி, நல்லாங்குளம் உள்பட அந்தந்தப் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் சிலைகளைக் கரைத்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai