Enable Javscript for better performance
அதிமுக மூன்றாண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக மூன்றாண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரசாரம்

    By திருவள்ளூர்  |   Published on : 02nd September 2014 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஈக்காடு, காக்களூர் ஆகிய பகுதிகளில் அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனைகள் விளக்க தெருமுனைப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு திருவள்ளூர் ஒன்றியக்குழுப் பெருந்தலைவர் புட்லூர் ஆர்.சந்திரசேகர் தலைமை வகித்தார்.

    பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ. மணிமாறன் முன்னிலை வகித்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுனியம் பலராமன் பங்கேற்று சாதனை விளக்க உரையும், மீண்டும் 7-வது முறையாக கழகப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு வாழ்த்துரையும் வழங்கினார்.

    இதனைத்தொடர்ந்து, தலைமை நிலையப் பேச்சாளர் காவேரி பங்கேற்று அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனைகள் குறித்து பேசினார்.

    தண்ணீர்குளம் ஏழுமலை, நிர்வாகிகள் வழக்குரைஞர் ராஜராஜன், சேகர், மகளிர் அணி நிர்வாகி சாந்தி, பொம்மி, ராஜசேகர், சந்திரன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai