சுடச்சுட

    

    அரசு அலுவலர்களுக்கு நிர்வாக சீர்திருத்தத் துறையினர் பயிற்சி

    By திருவள்ளூர்,  |   Published on : 02nd September 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பணியாளர், நிர்வாகச் சீர்திருத்த துறையினர் ஆண்டுதோறும் அளிக்கும் முன்னோடி பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    முகாமுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.

    முகாமில் ஆட்சியர் பேசியது:

    மக்களுக்கு சேவை செய்வதில், அவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு பணியாளர், நிர்வாகச் சீர்திருத்தத்துறையின் வாயிலாக 1982-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், திங்கள்கிழமை தொடங்கி 5 நாள்கள் முன்னோடி பயிற்சி, குறுகியக் கால பயிற்சி இம்முகாமில் வழங்கப்படவுள்ளது.

    ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த கோப்புகள் மீது சீரிய முறையில் விதிமுறைப்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசு அலுவலர்களுக்கு விளக்குவதே இம்முகாமின் நோக்கமாகும்.

    மேலும், இந்தப் பயிற்சியை பெறும் அலுவலர்கள், அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பயிற்சியின்போது எழும் சந்தேகங்களை முழுமையாக நிவர்த்தி செய்து கொண்டு, கடந்த கால கோப்புகள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

    அரசு இணைச் செயலாளர் மற்றும் ஆய்வு அலுவலர் மகாராஜன், உதவிப் பிரிவு அலுவலர்கள் வடிவேலு, திருமால்அழகு, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ஸ்ரீதரன், அனைத்துத்துறை அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai