சுடச்சுட

  

  தமிழக, ஆந்திரப் பகுதிகளுக்கிடையேயான மீன்பிடி எல்லைகளை வரையறை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.கண்ணன் தலைமை வகித்தார்.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ.வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான பீம்ராவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மதிவாணன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

  கோரிக்கைகள்: திருவள்ளூரில் கலை, அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கடந்து செல்ல சுரங்கப் பாதை அமைக்க வேண்டும். கும்மிடிப்பூண்டியில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.

  பொன்னேரி அரசு மருத்துவமனையில் குளிர்சாதன வசதியுடன் சவக்கிடங்கு அமைக்க வேண்டும். எல்லாபுரம் ஒன்றியத்தை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும்.

  ஆந்திரம், தமிழகம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆறு, ஏரி, கடல் எல்லையை வரையறை செய்து மீனர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

  போராட்டத்தில் அந்தக் கட்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai