சுடச்சுட

    

    கல்வித் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்

    By திருவள்ளூர்,  |   Published on : 02nd September 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கல்வித் தன்னார்வலர்களுக்கு செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் குறித்த பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிச்செல்லா குழந்தைகள் 2 ஆயிரத்து 44 பேர் கண்டறியப்பட்டு, அவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்காக இந்த மாவட்டத்தில் 34 சிறப்புப் பயிற்சி மையம், 4 உண்டு உறைவிடப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.

    மாணவர்களின் நலன் கருதி, பயிற்சி மையங்களில் கல்வித் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. முகாமில் அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் சுந்தர்ராஜன், ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai