சுடச்சுட

  

  அரசு வழங்கும் தொகுப்பு வீடுகளில் சலவைத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்தணி தாலுக்கா அலுவலகம் முன்பு சலவைத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  திருத்தணி சலவைத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் செயலர் கே.வி.குப்பன்ராஜ் தலைமை வகித்தார்.

  சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் அப்துல்அகமது, பேரணியை தொடங்கி வைத்தார்.

  திருத்தணி சலவைத் தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணி, காந்தி சாலை, பழைய சென்னை சாலை வழியாக தாலுக்கா அலுவலகம் வந்தடைந்தது.

  பின்னர், அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணியில் உள்ள சலவைத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

  சலவைத் துறை அமைக்க வேண்டும்.

  திருத்தணி, மேல் திருத்தணி, திருக்குளம் ஆகிய இடங்களில் உள்ள வண்ணார்குளம் சத்திரங்களை சீரமைக்க வேண்டும்.

  வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த விதவைகள், மாற்றுத்திறளானிகளுக்கு அரசு வழங்கும் தொகுப்பு வீடுகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

  பின்னர், தங்களின் கோரிக்கை மனுவை தாசில்தார் ரமேஷிடம் அவர்கள் வழங்கினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai