Enable Javscript for better performance
சுவரில் மோதிய கல்லூரிப் பேருந்து:12 மாணவர்கள் காயம்- Dinamani

சுடச்சுட

    

    சுவரில் மோதிய கல்லூரிப் பேருந்து:12 மாணவர்கள் காயம்

    By பூந்தமல்லி,  |   Published on : 02nd September 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்றத்தூர் அருகே மாணவர்களை ஏற்றிச் சென்ற கல்லூரிப் பேருந்து சுவரின் மீது மோதியதில் ஓட்டுநர் உள்பட 12 மாணவர்கள் காயமடைந்தனர்.

    நசரத்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரிப் பேருந்து ஒன்று, தாம்பரம், குரேம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 மாணவர்களை ஏற்றிக்கொண்டு திங்கள்கிழமை காலையில் கல்லூரியை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்ûஸ தாம்பரத்தைச் சேர்ந்த தேவராஜ் (37) ஓட்டிச் சென்றார்.

    பல்லாவரம் - குன்றத்தூர் சாலையில் மணஞ்சேரி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் உள்ள மதில் சுவர் மீது மோதியது.

    இதில் பேருந்து ஓட்டுநர் தேவராஜ் பலத்த காயமடைந்தார். பஸ்ஸில் இருந்த 12 மாணவர்கள் லேசான காயமடைந்தனர்.

    அவர்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பினர். ஓட்டுநர் தேவராஜ், மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai