Enable Javscript for better performance
பள்ளியின் பூட்டை உடைத்து ஆவணங்கள் எரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பள்ளியின் பூட்டை உடைத்து ஆவணங்கள் எரிப்பு

    By திருவள்ளூர்,  |   Published on : 02nd September 2014 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அருகே பள்ளியின் பூட்டை உடைத்து ஆவணங்களை எரித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    திருப்பாச்சூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.

    இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை தலைமை ஆசிரியை அனுசுயா, பள்ளியை பூட்டிவிட்டு சென்றுள்ளார். விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு பின்னர், திங்கள்கிழமை காலை வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அலமாரியிலிருந்த மாற்றுச்சான்று உள்பட பல ஆவணங்கள் எரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து, தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai