Enable Javscript for better performance
மாநில கராத்தே: ஆட்டோ ஓட்டுநர் மகன் சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    மாநில கராத்தே: ஆட்டோ ஓட்டுநர் மகன் சாம்பியன்

    By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 02nd September 2014 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில அளவிலான கராத்தே போட்டியில் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கீழ்முதலம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஆட்டோ ஓட்டுநர். இவரது மகன் சங்கர் (18).

    சங்கர், தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வருகிறார். கராத்தே வீரரான இவர், நியூ தமிழ்நாடு கராத்தே அசோசியேஷன்ஸ் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் "பிளாக் பெல்ட்' பிரிவில் அண்மையில் வெற்றி பெற்றார்.

    இதனைத்தொடர்ந்து, சென்னையில் மாநில அளிவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் அவர் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார்.

    அதேபோல், இதே பகுதியைச் சேர்ந்த கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் எம்.சபீர்பாஷா என்பவரும், இதே பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

    இவர்கள் இருவரையும் கீழ்முதலம்பேடு பகுதி மக்கள், அவர்களது பயிற்சியாளர் எம்.சீனிவாசன் ஆகியோர் பாராட்டினர்.

    இவர்கள் எதிர்வரும் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியிலும் பங்குபெற தகுதி பெற்றுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai