சுடச்சுட

    

    பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கணவர் உயிரிழந்தார். மனைவி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    பொன்னேரி அருகே கொடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (44). பெயின்ட் தொழிலாளர். இவரது மனைவி தனலட்சுமி (34).

    புலிக்குளம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்தற்காக லோகநாதன், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    கொக்குமேடு அருகே சென்றபோது, பின்புறம் வந்த கார், அவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த லோகநாதன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    தனலட்சுமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து பொன்னேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai