சுடச்சுட

    

    வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்

    By திருவள்ளூர்,  |   Published on : 02nd September 2014 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உறுப்பினர்களுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகள், நெறிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட நெடியம் கிராமத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

    மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் சின்னசாமி, நெடியம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்க தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் ரவி வரவேற்றார்.

    தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை சங்கங்களில் பெற்ற பயிர்க்கடன் தொகையை தவணைத் தேதிக்குள் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க் கடன் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறுதொழில் செய்ய வட்டியில்லா கடன் வழங்குதல், மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு சேமிப்பின் அடிப்படையில் கடன் வசதி, டாப் செட்கோ கடன் தானிய ஈட்டுக்கடன் போன்ற பல்வேறு கடன் திட்டங்கள் குறித்தும் பயிற்சி முகாமில் விளக்கிக் கூறப்பட்டது.

    தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தின் துணைத் தலைவர் கோபி, ஒன்றிய இயக்குநர் சந்திரன், கூட்டுறவு சார் பதிவாளர்கள் பொற்கைபாண்டியன், பாஸ்கரநாயுடு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். சங்கத்தின் செயலாளர் லோகநாதன் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai