சுடச்சுட

    

    கும்​மி​டிப்​பூண்​டியை அடுத்த ஆரணி ஆற்​றில் மணல் கடத்​திய லாரியை கவ​ரப்​பேட்டை போலீ​ஸார் செவ்​வாய்க்​கி​ழமை பறி​மு​தல் செய்​த​னர்.​

    கும்​மி​டிப்​பூண்​டியை அடுத்த புது​வா​யல் கூட்​டுச் சாலை​யில் கவ​ரப்​பேட்டை காவல் உதவி ஆய்​வா​ளர் மகா​லிங்​கம் வாக​னச் சோத​னை​யில் ஈடு​பட்​டார்.​

    அப்​போது,​​ ஆர​ணி​யில் இருந்து புது​வா​யல் வழி​யாக வந்த லாரியை போலீ​ஸார் மடக்​கி​ய​போது,​​ அதி​லி​ருந்த ஓட்​டு​நர் தப்​பிச் சென்​று​விட்​டார்.​

    இதை​ய​டுத்து,​​ லாரியை சோதனை செய்​த​போது,​​ ஆரணி ஆற்​றில் இருந்து அனு​ம​தி​யின்றி மணல் கடத்தி வந்​தது தெரி​ய​வந்​தது.​ இத​னைத்​தொ​டர்ந்து,​​ அந்த லாரியை போலீ​ஸார் பறி​மு​தல் செய்​த​னர்.​ மேலும்,​​ லாரி ஓட்​டு​ந​ரை​யும் தேடி வரு​கின்​ற​னர்.​ ​

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai