சுடச்சுட

    

    வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலையொட்டி திருப்பாச்சூர் ஊராட்சியில் அதிமுகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 18-ஆம் தேதி உள்ளாட்சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட 14-வது வார்டு பகுதியான திருப்பாச்சூர் ஊராட்சியில் அதிமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்த பாக்கியம் இறந்தார்.

    இதற்காக நடைபெறும் தேர்தலில் தற்போது அதிமுக சார்பில் பாக்கியத்தின் மகள் சித்ரா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சிறுனியம் பலராமன், திருவள்ளூர் தொகுதி எம்.பி. வேணுகோபால், எம்.எல்.ஏ. பி.வி. ரமணா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், பூண்டி ஒன்றியத் தலைவர் அம்மு மாதவன் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai