சுடச்சுட

    

    ஊராட்​சி துப்​பு​ர​வுப் பணிக்கு பயன்​ப​டுத்​தப்​பட்ட மாடு திருட்டு

    By DN  |   Published on : 03rd September 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திரு​வள்​ளூர் அருகே உள்ள பேரம்​பாக்​கம் ஊராட்​சி​யின் துப்​பு​ரவுப் பணிக்கு பயன்​ப​டுத்​தப்​பட்டு வந்த ரூ.20 ஆயி​ரம் மதிப்​பி​லான எருது மாட்​டைத் திரு​டிச் சென்ற மர்ம நபர்​களை போலீ​ஸார் தேடி வரு​கின்​ற​னர்.​

    திரு​வள்​ளூரை அடுத்த கடம்​பத்​தூர் ஒன்​றி​யத்​துக்கு உள்​பட்​டது பேரம்​பாக்​கம் ஊராட்சி.​ இந்த ஊராட்​சி​யில் திமு​க​வைச் சேர்ந்த லயன் துரை என்​ப​வர் தலை​வ​ராக உள்​ளார்.​

    இந்​நி​லை​யில்,​​ ஊராட்​சி​யின் துப்​பு​ர​வுப் பணிக்​காக வண்டி இழுக்க ரூ.20 ஆயி​ரம் மதிப்​பி​லான எருது மாடு ஒன்றை வைத்து ஊராட்சி நிர்​வா​கத்​தி​னர் பரா​ம​ரித்து வந்​த​னர்.​

    விநா​ய​கர் சதுர்த்​தி​யை​யொட்டி வியா​ழக்​கி​ழமை மாலை ஊராட்சி அலு​வ​லக வளா​கத்​தில் மாட்​டுக்கு தீனி வைத்​து​விட்​டுச் சென்​ற​னர்.​

    பின்​னர்,​​ சனிக்​கி​ழமை வந்து பார்த்​த​போது அங்​கி​ருந்த எருது மாடு காண​வில்லை.​

    இதை​ய​டுத்து,​​ ஊராட்​சித் தலை​வர் லயன் துரை உள்​ளிட்ட ஊராட்சி அலு​வ​லர்​கள் பேரம்​பாக்​கம்,​​ சுற்​றுப்​ப​கு​தி​க​ளில் உள்ள மாட்டு இறைச்​சிக் கடை​கள்,​​ ​ மாடு சந்​தை​க​ளுக்​குச் சென்று தேடி​னர்.​ ஆனால்,​​ மாடு கிடைக்​க​வில்லை.​

    இது​கு​றித்த புகா​ரின்​பே​ரில் மப்​பேடு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​ற​னர்.​

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai