சுடச்சுட

    

    திருவள்ளூர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கல்வித் தன்னார்வலர்களுக்கு செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் குறித்த பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிச்செல்லா குழந்தைகள் 2 ஆயிரத்து 44 பேர் கண்டறியப்பட்டு, அவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்காக இந்த மாவட்டத்தில் 34 சிறப்புப் பயிற்சி மையம், 4 உண்டு உறைவிடப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. மாணவர்களின் நலன் கருதி, பயிற்சி மையங்களில் கல்வித் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

    முகாமில் அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் சுந்தர்ராஜன், ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai