சுடச்சுட

    

    நரிக்​கு​ற​வர் நல வாரி​யத்​தில் பதி​வு​ செய்​யும் உறுப்​பி​னர்​க​ளுக்கு நலத் ​திட்ட உத​வி​கள்: ஆட்​சி​யர் அறி​விப்பு

    By DN  |   Published on : 03rd September 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் உள்ள நரிக்​கு​ற​வர் இனத்​தைச் சேர்ந்த மக்​க​ளுக்​கான நல வாரி​யத்​தில் பதிவு செய்​யும் உறுப்​பி​னர்​க​ளுக்கு அர​சின் பல்​வேறு நலத்​ திட்ட உத​வி​கள் வழங்​கப்​ப​ட​வுள்​ளன.​

    இது​கு​றித்து மாவட்ட ஆட்​சி​யர் கொ.வீர​ரா​க​வ​ராவ் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​கு​றிப்பு:​

    திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் உள்ள நரிக்​கு​ற​வர் இனத்​தைச் சார்ந்​த​வர்​க​ளுக்​கென தனி​யாக அமைக்​கப்​பட்​டுள்ள நரிக்​கு​ற​வர் நல வாரி​யத்​தின் மூலம் அர​சின் பல்​வேறு நலத்​திட்ட உத​வி​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.​

    இது​கு​றித்த விழிப்​பு​ணர்வு இது​வரை அந்த மக்​க​ளுக்கு ஏற்​ப​டா​த​தால் நல வாரி​யம் மூலம் பதிவு செய்​துள்ள நரிக்​கு​ற​வர்​க​ளுக்கு கீழ்​கா​ணும் உத​வி​கள் வழங்​கப்​பட உள்​ளன.​

    திட்ட உத​வி​கள்:​​ விபத்து ஈட்​டு​று​தித் திட்​டத்​தின்​கீழ்,​​ விபத்​தி​னால் மர​ணம் ஏற்​பட்​டால் உத​வித்​தொகை ரூ.1 லட்​சம்,​​ விபத்​தால் ஊனம் ஏற்​பட்​டால் ஊனத்​தின் தன்​மைக்​கேற்ப ரூ.10 ஆயி​ரம் முதல் ரூ.1 லட்​சம் வரை உத​வித்​தொகை வழங்​கப்​ப​டும்.​

    இயற்கை மர​ணத்​திற்​கான உத​வித்​தொகை ரூ.15 ஆயி​ரம்,​​ ஈமச்​ச​டங்கு செல​வுக்​கான உத​வித்​தொகை ரூ.2 ஆயி​ரம் வழங்​கப்​ப​டும்.​ ​ கல்வி உத​வித்​தொ​கை​யாக பத்​தாம் வகுப்பு படித்து வரும் மாண​வி​ய​ருக்கு ரூ.1000,​ பத்​தாம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாண​வி​ய​ருக்கு ரூ.1000,​ பதி​னோ​றாம் வகுப்பு படித்து வரும் மாண​வி​ய​ருக்கு ரூ.1000,​ 12-ஆம் வகுப்பு படிக்​கும் மாண​வி​ய​ருக்கு ரூ.1,500,​ 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாண​வி​க​ளுக்கு ரூ.1,500 வழங்​கப்​ப​டும்.​

    மேலும்,​​ முறை​யான பட்​டப்​ப​டி​புக்கு ரூ.1,500,​ மாண​வர் இல்ல வச​தி​யு​டன் கூடிய முறை​யான பட்​டப்​ப​டிப்​புக்கு ரூ.1,750,​ பட்ட மேற்​ப​டிப்​புக்கு ரூ.2,000,​ மாண​வர் இல்ல வச​தி​யு​டன் கூடிய முறை​யான பட்​ட​மேற்​ப​டிப்​புக்கு ரூ.​ 3 ஆயி​ரம்,​​ தொழிற்​கல்வி பட்​டப்​ப​டிப்​புக்கு ரூ.2 ஆயி​ரம்,​​ மாண​வர் இல்ல வச​தி​யு​டன் கூடிய தொழிற்​கல்வி பட்​டப்​ப​டிப்​புக்கு ரூ.4 ஆயி​ரம்,​​ தொழிற்​கல்வி பட்ட மேற்​ப​டிப்​புக்கு ரூ.4 ஆயி​ரம்,​​ மாண​வர் இல்ல வச​தி​யு​டன் தொழிற்​கல்வி பட்ட மேற்​ப​டிப்​புக்கு ரூ.6 ஆயி​ரம்,​​ ஐ.டி.ஐ.​ அல்​லது தொழிற்​ப​யிற்சி படிப்​புக்கு ரூ.1000,​ மாண​வர் இல்ல வச​தி​யு​டன் கூடிய ஐ.டி.ஐ அல்​லது பல்​தொ​ழில் பயிற்சி படிப்​புக்கு ரூ.1,200 வழங்​கப்​ப​டும்.​

    இது​த​விர,​​ 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயி​லும் மாண​வர்​க​ளுக்கு ரூ.500 ​(மாதம் ரூ.50 என 10 மாதங்​கள் வழங்​கப்​ப​டும்)​.​ 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயி​லும் மாண​வர்​க​ளுக்கு ரூ.1000 ​(மாதம் ரூ.100 என 10 மாதங்​கள்)​வழங்​கப்​ப​டும்.​

    திரு​மண உத​வித்​தொ​கை​யாக ரூ.2,000,​ மகப்​பேறு உத​வித்​தொகை ரூ.6 ஆயி​ரம்,​​ ​(மாதம் ரூ.1,000 வீதம் 6 மாதங்​க​ளுக்கு)​ வழங்​கப்​ப​டும்.​

    கருச்​சி​தைவு,​​ கருக்​க​லைப்பு ஆகி​ய​வற்​றுக்கு ரூ.3 ஆயி​ரம் வழங்​கப்​ப​டும்.​

    மூக்​குக் கண்​ணாடி செல​வுத் தொகையை ஈடு செய்​தல் ரூ.​ 500,​ முதி​யோர் ஓய்​வூ​தி​யம் மாதந்​தோ​றும் ரூ.1000 வழங்​கப்​ப​டும்.​

    மேற்​கண்ட உத​வி​க​ளைப் பெற,​​ நரிக்​கு​ற​வர் குடும்​பத்​தின் தலை​வர் 18 வயது நிறைவு செய்து 60 வய​துக்​குள்​பட்டு அமைப்​புச்​சாரா தொழில்,​​ விவ​சா​யக் கூலித்​தொழி​லில் ஈடு​பட்​டுள்​ள​வர் இந்த நல​வா​ரி​யத்​தில் உறுப்​பி​ன​ராக பதிவு செய்​ய​லாம்.​ ​

    இதில் உறுப்​பி​ன​ராக பதிவு செய்ய பதி​வுக்​கட்​ட​ணம் ஏது​மில்லை.​ அதற்​கான இல​வச விண்​ணப்​பத்தை திரு​வள்​ளுர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் தரை​த​ளத்​தில் அமைந்​துள்ள மாவட்ட பிற்​ப​டுத்​தப்​பட்​டோர்,​​ சிறு​பான்​மை​யி​னர் நல அலு​வ​ல​கத்​தில் பெற்று பூர்த்தி செய்து அலு​வ​ல​கத்​தில் வழங்​க​லாம்.​

    மேலும் விவ​ரங்​க​ளுக்கு மாவட்ட பிற்​ப​டுத்​தப்​பட்​டோர்,​சிறு​பான்​மை​யி​னர் நல அலு​வ​லரை நேரிலோ அல்​லது 044-2766 6121 என்ற தொலை​பேசி எண்​ணிலோ தொடர்​பு​கொள்​ள​லாம் என அதில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.​

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai