சுடச்சுட

  

  கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து நான்கரை பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

  கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை தெலுங்கு காலனிப் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தனின் மனைவி ரமணி (44). இவர் வீட்டுக்கு வெளியே வரவேற்புப் பகுதியில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் இருவர் ரமணியின் கழுத்தில் இருந்து நான்கரை பவுன் தங்க நகையை பறித்துள்ளனர்.

  ரமணி எழுந்து பார்த்தபோது, அரைக்கால் சட்டை, டி-ஷர்ட் அணிந்த இருவர் நகையைப் பறித்தது தெரியவந்து வீட்டினுள் படுத்திருந்த அவரது மகனை எழுப்பி வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். ரமணியிடம் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடிப்பதற்கு முன்பு அருகில் உள்ள வீடுகளின் கதவுகளை வெளிப்பக்கமாக பூட்டி சென்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai