சுடச்சுட

  

  நெடுஞ்சாலையில் பள்ளங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்: பொதுமக்கள் அவதி

  By DN  |   Published on : 03rd September 2014 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பெரிய பள்ளங்களில் இறங்கும் கனரக வாகனங்கள் நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றன.

  திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலை வழியாக காக்களூர், திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர், மப்பேடு போன்ற தொழிற்பேட்டை பகுதிகளில் இருந்து ஏராளமான கனரக வாகனங்கள் பெரியபாளையம் வழியாக ஆந்திர மாநிலங்களுக்குச் சென்று வருகின்றன.

  மேலும், திருவள்ளூரில் இருந்து செங்குன்றம் நெடுஞ்சாலையில் உள்ள ஈக்காடு, ஈக்காடு கண்டிகை, ஒதிக்காடு, கீழானூர், மேலானூர், வெள்ளியூர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் அந்தச் சாலை வழியாக திருவள்ளூருக்கு வந்து செல்கின்றனர். மேலும், தினசரி ஏராளமான பள்ளி மாணவர்களும் சைக்கிள்கள், இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்தச் சாலையில் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளன. இதனால், வேகமாக வரும் கனரக வாகனங்கள் சாலைப் பள்ளங்களில் இறங்கி விபத்துகளில் சிக்குகின்றன.

  மேலும், அதிக பளுவோடு வரும் கனரக வாகனங்கள் சில நேரங்களில் இந்தப் பள்ளங்களில் சிக்கி விடுகின்றன.

  இதுபோன்ற இன்னல்களைப் போக்கும் வகையிலும், விபத்துக்களை குறைக்கும் வகையிலும் நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து அந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai