Enable Javscript for better performance
நெல்​வாய் கிரா​மத்​தில் வைரஸ் காய்ச்​சல் எதி​ரொலி:​ மருத்​து​வக் குழு​வி​னர் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நெல்​வாய் கிரா​மத்​தில் வைரஸ் காய்ச்​சல் எதி​ரொலி:​ மருத்​து​வக் குழு​வி​னர் முகாம்

    By DN  |   Published on : 03rd September 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பூண்டி அருகே நெல்​வாய் கிரா​மத்​தில் வைரஸ் காய்ச்​சல் எதி​ரொ​லி​யால்,​​ 20-க்கும் மேற்​பட்ட மருத்​து​வக் குழு​வி​னர் முகா​மிட்டு பரி​சோ​தனை மேற்​கொண்டு வரு​கின்​ற​னர்.​

    ஊத்​துக்​கோட்டை வட்​டம்,​​ பூண்டி ஒன்​றி​யத்​துக்​குள்​பட்ட நெல்​வாய் கிரா​மத்​தில் 400-க்கும் மேற்​பட்ட கிராம மக்​கள் வசித்து வரு​கின்​ற​னர்.​

    விவ​சா​யத்தை முக்​கி​யத் தொழி​லாக கொண்ட இந்த கிரா​மத்​தில் தெருக்​கள்,​​ சுற்​றுப்​பு​றங்​க​ளில் கால்​ந​டை​களை வளர்ப்​ப​தா​லும்,​​ சமீ​பத்​தில் பெய்த மழை​யால் கிரா​மத்​தைச் சுற்றி மழை நீர் தேங்​கி​யுள்​ள​தா​லும் அப்​ப​கு​தி​யில் சுகா​தார சீர்​கேடு இருந்​தது.​

    இந்​நி​லை​யில் மர்​மக் காய்ச்​சல் இருப்​ப​தாக தக​வல் கிடைத்​த​தை​ய​டுத்து கடந்த இரண்டு நாள்​க​ளாக மாவட்ட துணை இயக்​கு​நர் டாக்​டர் பிர​பா​கர்,​​ மாவட்ட மலே​ரிய அலு​வ​லர் ராதா​கி​ருஷ்​ணன்,​​ மருத்​து​வர் கவிதா,​​ சுகா​தார ஆய்​வா​ளர் முரளி,​​ கிராம சுகா​தார செவி​லி​யர்​கள்,​​ மஸ்​தார்​கள் உள்​ளிட்ட 20-க்கும் மேற்​பட்ட மருத்​து​வக் குழு​வி​னர் அங்கு முகா​மிட்டு,​​ கிராம மக்​க​ளுக்கு பரி​சோ​தனை செய்து வரு​கின்​ற​னர்.​

    லேசா​னக் காய்ச்​ச​லால் பாதிக்​கப்​பட்​டி​ருந்த 8 பேருக்கு,​​ ரத்​தப் பரி​சோ​தனை செய்து,​​ மருந்து,​​ மாத்​தி​ரை​களை வழங்கி,​​ கிரா​மத்​தில் உள்ள ஒவ்​வொரு வீட்​டைச் சுற்​றி​யும்,​​ பிளீச்​சிங் பவு​டர் தெளித்து,​​ டயர்​கள்,​​ பிளாஸ்​டிக் குடு​வை​கள்,​​ தொட்​டி​க​ளில் தண்​ணீர் தேங்​கி​யுள்​ளதா?​ என்​ப​தை​யும் கண்​ட​றிந்து அவற்றை உட​ன​டி​யாக அகற்​றி​யும்,​​ தேவை​யற்ற பொருள்​க​ளில் தண்​ணீர் தேங்​க​வி​டா​மல் இருக்​க​வும் பொது​மக்​க​ளுக்கு அறி​வுரை கூறி

    வரு​கின்​ற​னர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai