சுடச்சுட

    

    பசுமை வீடு​கள் கோரி ஆட்​சி​ய​ரி​டம் மனு

    By திரு​வள்​ளூர்  |   Published on : 03rd September 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திரு​வள்​ளூர் அருகே வசித்து வரும் மாற்​றுத்​தி​ற​னா​ளி​கள்,​​ தங்​க​ளுக்கு பசுமை வீடு​கள் அல்​லது இந்​திரா நினை​வுக் குடி​யி​ருப்பு திட்ட வீடு​களை வழங்க வேண்​டும் என மாவட்ட ஆட்​சி​ய​ரி​டம் கோரிக்கை மனு அளித்​த​னர்.​

    திரு​வள்​ளூர் மாவட்​டம்,​​ கே.கே.​ சத்​தி​ரத்​துக்கு உள்​பட்ட காவே​ரி​ரா​ச​பு​ரம் கிரா​மத்​தைச் சேர்ந்த சகோ​த​ரி​கள் அன்​னி​யம்மா ​(45),​ தெய்​வானை ​(48),​ வள்​ளி​யம்​மாள் ​(50).​

    இவர்​கள் 3 அடி உய​ரம் மட்​டுமே உள்​ள​தால் அவர்​கள் மாற்​றுத்​தி​ற​னா​ளி​க​ளாக அறி​விக்​கப்​பட்​ட​னர்.​ இவர்​கள்,​​ திங்​கள்​கி​ழமை,​​ திரு​வள்​ளூர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் நடை​பெற்ற மக்​கள் குறை​தீர்வு நாள் கூட்​டத்​தில் கோரிக்கை மனு அளித்​த​னர்.​

    மனு விவ​ரம்:​ எங்​க​ளுக்​கென சொந்​த​மாக வீடு இல்லை.​

    இத​னால் கிரா​மத்​தில் உள்ள திண்​ணை​க​ளி​லும்,​​ பள்ளி வளா​கத்​தி​லும் வசித்து வரு​கி​றோம்.​

    மழைக்​கா​லங்​க​ளி​லும்,​​ குளிர்​கா​லங்​க​ளி​லும் நாங்​கள் மிக​வும் அவ​திப்​பட்டு வரு​கி​றோம்.​ எனவே,​​ எங்​க​ளுக்கு தமி​ழக அர​சின் பசுமை வீடு அல்​லது மத்​திய அர​சின் இந்​திரா நினை​வுக் குடி​யி​ருப்பு வீடு​களை ஒதுக்​கித்​தர வேண்​டும் என அதில் கூறப்​பட்​டுள்​ளது.​

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai