சுடச்சுட

    

    திரு​வள்​ளூர் அருகே இயங்கி வரும் ஒன்​றிய தொடக்​கப் பள்​ளி​யின் பூட்டை உடைத்து அதில் இருந்த ஆவ​ணங்​களை எரித்​த​தாக 6 பேரை போலீ​ஸார் கைது ​ செய்​த​னர்.​

    திரு​வள்​ளூரை அடுத்த திருப்​பாச்​சூ​ரில் இயங்கி வரும் ஒன்​றிய தொடக்​கப் பள்​ளியை அதன் தலைமை ஆசி​ரியை அனு​சுயா கடந்த வியா​ழக்​கி​ழமை மாலை பூட்​டி​விட்​டுச் சென்​றார்.​

    விடு​முறை தினங்​கள் முடிந்து திங்​கள்​கி​ழமை பள்​ளி​யைத் திறக்க வந்​த​போது,​​ பள்​ளி​யின் பூட்டு உடைக்​கப்​பட்டு அதன் உள்ளே வைக்​கப்​பட்​டி​ருந்த மாண​வர்​க​ளின் மாற்​றுச் சான்​று​கள்,​​ ஆவ​ணங்​கள் தீயில் கருகி சாம்​ப​லாகி கிடந்​தன.​

    இது​கு​றித்து அனு​சுயா திரு​வள்​ளூர் வட்ட போலீ​ஸில் புகார் கொடுத்​தார்.​ புகா​ரின் பேரில் இன்ஸ்​பெக்​டர் கோகுல்​ராஜ் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வந்​தார்.​

    விசா​ர​ணை​யில்,​​ திருப்​பாச்​சூ​ரைச் சேர்ந்த கவி​தாஸ் ​(24),​ டேவிட் ​(25),​ பார்த்​திப ராஜ் ​(21),​ அப்பு ​(21),​ அஜித் ​(19),​ கார்த்​திக் ​(21) ஆகி​யோர் அடிக்​கடி அந்த பள்ளி வளா​கத்​தில் அமர்ந்து மது அருந்​து​வர் என தெரிய வந்​தது.​

    அதன் அடிப்​ப​டை​யில் அவர்​களை அழைத்து விசா​ரித்​த​தில் மது போதை​யில் அவர்​கள் பள்​ளி​யின் பூட்டை உடைத்து ஆவ​ணங்​களை எரித்​தது தெரிய வந்​தது.​

    இதை​ய​டுத்து போலீ​ஸார்,​​ அரசு சொத்தை சேதப்​ப​டுத்​திய பிரி​வின் கீழ் மேற்​கண்ட 6 பேரை கைது செய்து சிறை​யில் அடைத்​த​னர்.​

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai