சுடச்சுட

    

    பூட்டிய வீட்டில் தீ விபத்து: ஏராளமான பொருள்கள் சேதம்

    By DN  |   Published on : 03rd September 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர்- திருத்தணி நெடுஞ்சாலையில் பூட்டிக் கிடந்த வீட்டில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருள்கள் சேதமடைந்தன.

    திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் முன்னாள் எம்.எல்.ஏ. சக்குபாய் தேவராஜன் வீடு உள்ளது. இந்த வீட்டில் உள்ள ஒரு பிரிவில் அஸ்லம்பாஷா - ஜரீனா தம்பதியினர் குடியிருந்து வருகின்றனர்.

    ஜரீனா, செவ்வாய்க்கிழமை காலையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றார். இந்நிலையில், பூட்டியிருந்த வீட்டில் இருந்து புகை எழுந்துள்ளது.

    இதுகுறித்து அந்தப் பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதன்பேரில், அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கதவை உடைத்து தீயை அணைத்தனர்.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

    தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாயின.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai