சுடச்சுட

    

    பொறி​யா​ள​ரை தாக்​கி​ய​தாக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மீது வழக்கு

    By DN  |   Published on : 03rd September 2014 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திரு​வள்​ளூர் அருகே வீட்​டு​வ​சதி வாரிய குடி​யி​ருப்​புக்​குச் சொந்​த​மான நிலத்தை அளக்​கும் பணி​யில் ஈடு​பட்​டி​ருந்த பொறி​யா​ள​ரைத் தாக்​கி​ய​தாக அதி​முகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ள​னர்.​

    திரு​வள்​ளூரை அடுத்த செவ்​வாப்​பேட்​டை​யில் தமிழ்​நாடு வீட்​டு​வ​சதி வாரி​யத்​துக்​குச் சொந்​த​மாக 6 சென்ட் நிலம் உள்​ளது.​ அந்த நிலத்தை கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி,​​ வீட்​டு​வ​சதி வாரி​யப் பொறி​யா​ளர் சிவ​கு​மார்,​​ நில அள​வை​யர் வடி​வேலு ஆகி​யோர் அளந்து கொண்​டி​ருந்​த​னர்.​ ​

    அப்​போது,​​ அந்​தப் பகுதி அதி​முக மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பொம்மி அங்கு வந்து,​​ இந்த இடம் எங்​க​ளுக்​குச் சொந்​த​மா​னது எனக் கூறி,​​ தக​ராறு செய்​த​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​

    அப்​போது ஊராட்சிக் குழு உறுப்பினர் பொம்மி,​​ பொறி​யா​ளர் சிவ​கு​மாரை தாக்​கி​னா​ராம்.​ இது​கு​றித்து,​​ சிவ​கு​மார் அளித்த புகா​ரின்​பே​ரில் செவ்​வாப்​பேட்டை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​ற​னர்.​

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai