சுடச்சுட

    

    மூதாட்​டி​யி​டம் நகை பறிப்பு:​ இளை​ஞர் போலீ​ஸில் ஒப்​ப​டைப்பு

    By DN  |   Published on : 03rd September 2014 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அம்​பத்​தூர் அருகே மூதாட்​டி​யி​டம் நகையைப் பறித்​துச் சென்ற இளை​ஞரை பொது​மக்​கள் பிடித்து போலீ​ஸா​ரி​டம் ஒப்​ப​டைத்​த​னர்.​

    சென்னை கொரட்​டூர்,​​ வீட்​டு​வ​சதி வாரி​யக் குடி​யி​ருப்பு 41- வது தெரு​வைச் சேர்ந்​த​வர் காளி.​ இவ​ரது மனைவி காமாட்சி ​(64).​

    இவர்​கள் இரு​வ​ரும் வில்​லி​வாக்​கத்​தில் உள்ள உற​வி​னர் வீட்​டுக்​குச் சென்​று​விட்டு புற​ந​கர் ரயில் மூலம் கொரட்​டூர் வந்​த​னர்.​

    பின்​னர்,​​ அங்​கி​ருந்து வீட்​டுக்கு நடந்து சென்று கொண்​டி​ருந்​த​னர்.​ அப்​போது,​​ பின்​னால் மோட்​டார் சைக்​கி​ளில் வந்த இரண்டு பேரில் ஒரு​வர்,​​ காமாட்​சி​யின் கழுத்தி​லி​ருந்த 4 பவுன் சங்கி​லியை பறித்​தார்.​

    காமாட்​சி​யின் அல​றல் சத்​தத்​தைக் கேட்ட அக்​கம்​பக்​கத்​தி​னர் அங்கு வந்து நகைப் பறித்​த​வரை விரட்​டிச் சென்று பிடித்​த​னர்.​ மோட்​டார் சைக்​கிள் ஓட்​டிச் சென்​ற​வர் தப்​பி​விட்​டார்.​ இதை​ய​டுத்து,​​ அவரை கொரட்​டூர் போலீ​ஸா​ரி​டம் பொது​மக்​கள் ஒப்​ப​டைத்​த​னர்.​

    விசா​ர​ணை​யில்,​​ அவர் வில்​லி​வாக்​கம் ஏரிக்​க​ரை​யைச் சேர்ந்த பிர​காஷ் ​(24) என்​றும்,​​ தப்​பிச் சென்​ற​வர் அய​னா​வ​ரத்​தைச் சேர்ந்த சுரேஷ் என்​ப​தும் தெரி​ய​வந்​தது.​

    இத​னைத்​தொ​டர்ந்து,​​ போலீ​ஸார் பிர​காஷை கைது செய்து,​​ தப்​பிய சுரேஷை தேடி வரு​கின்​ற​னர்.​

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai