சுடச்சுட

    

    ராஜம்​மாள் தேவி பூங்கா மீண்​டும் ரூ.6 லட்​சத்​தில் புதுப்​பிப்பு

    By DN  |   Published on : 03rd September 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக ஆட்​சி​யில் ரூ.5 லட்​சத்​தில் சீர​மைக்​கப்​பட்ட ராஜம்​மாள் தேவி பூங்கா,​​ கடந்த ஆண்டு அழிக்​கப்​பட்டு அதில் தாய் சேய் நல விடுதி கட்​டப்​பட்​டது.​

    தற்​போது ரூ.6 லட்​சம் செல​வில் மீண்​டும் புதுப்​பிக்​கப்​பட்டு வரு​கி​றது.​

    திரு​வள்​ளூர் நேதாஜி சாலை​யில் ராஜம்​மாள் தேவி என்​ப​வ​ரால் கடந்த 30 ஆண்​டு​க​ளுக்கு முன்பு இடம் வழங்​கப்​பட்டு அந்த இடம் பூங்​கா​வாக பரா​ம​ரிக்​கப்​பட்டு வரு​கி​றது.​

    கடந்த திமுக ஆட்​சி​யின்​போது இந்த ராஜம்​மாள் தேவி பூங்கா ரூ.5 லட்​சம் செல​வில் சீர​மைக்​கப்​பட்டு செயற்கை நீரூற்று,​​ இருக்​கை​கள்,​​ நடை​ப​யிற்சி பாதை,​​ பூச்​செ​டி​கள் ஆகி​யவை அமைக்​கப்​பட்​டன.​

    இத​னி​டையே,​​ கடந்த ஆண்டு திரு​வள்​ளூர் நக​ராட்சி சார்​பில் நேதாஜி சாலை,​​ தோல்​கேட்,​​ தில​கர் தெரு,​​ பெரும்​பாக்​கம் உள்​ளிட்ட பகுதி மக்​க​ளுக்​காக ராஜம்​மாள் தேவி பூங்​காவை அழித்து தாய் சேய் நல​வி​டுதி கட்​டப்​பட்​டது.​

    இத​னால்,​​ அந்​தப் பூங்​காவை பயன்​ப​டுத்தி வந்த பொது​மக்​கள் அதி​ருப்தி அடைந்​த​னர்.​ ​

    இந்​நி​லை​யில்,​​ திரு​வள்​ளூர் நக​ராட்சி சார்​பில் மீண்​டும் ரூ.4 லட்​சம் செல​வில் நடை​ப​யிற்​சிப் பாதை,​​ செடி​கள் அமைப்​பது,​​ கிரில் கம்பி அமைத்​தல்,​​ ரூ.2 லட்​சம் செல​வில் சுற்​றுச்​சு​வர் கட்​டு​தல் ஆகிய பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.​

    இத​னால்,​​ மாலை நேர ஓய்​வுக்​கா​க​வும்,​​ அதி​கா​லை​யில் நடை​ப​யிற்சி மேற்​கொள்​ள​வும் மீண்​டும் இடம் கிடைத்த மகிழ்ச்​சி​யில் மக்​கள் உள்​ள​னர்.​

    நெடுஞ்​சா​லைத் துறை கைப்​பற்​றுமா?​​ திரு​வள்​ளூர் -​ திருத்​தணி நெடுஞ்​சா​லை​யில் அந்​தப் பூங்கா உள்ள இடத்​தில் சாலை வளைவு மிக​வும் குறு​க​லாக இருப்​ப​தா​லும்,​​ தொடர் விபத்​துக்​கள் நடை​பெ​று​வ​தா​லும் அந்த பூங்கா இடத்​தில் பாதி​ய​ளவை நக​ராட்​சி​யி​ன​ரி​டம் இருந்து கைப்​பற்றி,​​ அந்த பூங்​காவை அழித்து வட்​டச் சாலையை அக​லப்​ப​டுத்​தும் முயற்சி ஒரு​பு​றம் நடை​பெற்று வரு​கி​றது.​

    இத​னால்,​​ தற்​போது ரூ.6 லட்​சம் செல​வில் சீர​மைக்​கப்​ப​டும் பூங்கா மீண்​டும் அழிக்​கப்​பட்​டா​லும் ஆச்​ச​ரி​யப்​ப​டு​வ​தற்​கில்லை என விவ​ரம் அறிந்​த​வர்​கள் கூறு​கின்​ற​னர்.​

    இது​கு​றித்து,​​ சம்​பந்​தப்​பட்ட அதி​கா​ரி​க​ளி​டம் கேட்​ட​போது,​​ நெடுஞ்​சாலை அக​லப்​ப​டுத்​தும் பணி குறித்து இப்​போது ஏதும் சொல்​வ​தற்​கில்லை எனக் கூறி​னர்.​

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai