Enable Javscript for better performance
விநா​ய​கர் சிலை ஊர்​வ​லம்:​ இரு கிரா​மத்​தி​னர் இடையே மோதல்- Dinamani

சுடச்சுட

    

    விநா​ய​கர் சிலை ஊர்​வ​லம்:​ இரு கிரா​மத்​தி​னர் இடையே மோதல்

    By DN  |   Published on : 03rd September 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சோழ​வ​ரம் அருகே ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்ற விநா​ய​கர் சிலை ஊர்​வ​லத்​தின்​போது ஏற்​பட்ட தக​ராறு,​​  இரு கிரா​மத்​தி​ன​ரி​டையே மோத​லாக மாறி​யது.​

    விநா​ய​கர் சதுர்த்​தி​யை​யொட்டி,​​ சோழ​வ​ரம் அருகே உள்ள திரு​நிலை கிரா​மத்​தில் விநா​ய​கர் சிலை வைத்து வழி​பாடு செய்​யப்​பட்​டது.​

    இந்த விநா​ய​கர் சிலையை ஞாயிற்​றுக்​கி​ழமை,​​ அந்​தப் பகுதி மக்​கள் டிராக்​ட​ரில் கொண்​டு​சென்று,​​ சீமா​வ​ரம் பகு​தி​யில் உள்ள கொசஸ்​தலை ஆற்​றில் கரைத்​த​னர்.​

    பின்​னர்,​​ அவர்​கள் திரு​நிலை கிரா​மத்​துக்கு திரும்​பிக் கொண்​டி​ருந்​த​னர்.​ ​ அப்​போது,​​ சின்​ன​முல்​லை​வா​யல் கிரா​மம் வழி​யாக டிராக்​டர் சென்​ற​போது,​​ அங்கு சாலை​யில் நின்று கொண்​டி​ருந்​த​வர்​க​ளு​டன் தக​ராறு ஏற்​பட்​டுள்​ளது.​

    இதை​ய​டுத்து,​​ அவர்​களை திரு​நிலை கிரா​மத்​தி​னர் தாக்​கி​ய​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ இதில் சின்​ன​முல்​லை​வா​யல் கிரா​மத்​தைச் சேர்ந்த 11 பேர் காய​ம​டைந்து,​​ பொன்​னேரி அரசு மருத்​து​வ​ம​னை​யில் ​ அனு​ம​திக்​கப்​பட்​ட​னர்.​

    இது​கு​றித்து மீஞ்​சூர் போலீ​ஸில் சின்​ன​முல்​லை​வா​யல் கிரா​மத்​தி​னர் புகார் அளித்​த​னர்.​ இதன்​பே​ரில்,​​ தாக்​கு​தல் சம்​ப​வத்​தில் ஈடு​பட்​ட​தாக 5-க்கும் மேற்​பட்ட நபர்​க​ளைப் பிடித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​ற​னர்.​ ​ ​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai