சுடச்சுட

    

    ஆர்.கே.பேட்டை ஊராட்சியில் 100 குடும்பங்களுக்கு கறவை மாடுகள்

    By திருத்தணி,  |   Published on : 04th September 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 50 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகளை அரக்கோணம் மக்களவை உறுப்பினர் திருத்தணி கோ.அரி வழங்கினார்.

    தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் விழா ஆர்.கே.பேட்டை ஒன்றியம், காண்டாபுரம், கதன்நகரம், ஊராட்சியில் நடைபெற்றது.

    திருத்தணி கோட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் மருத்துவர் செல்லதுரை தலைமை வகித்தார்.

    ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.இளங்கோவன், துணைத் தலைவர் ஜெயவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட கவுன்சிலர் சின்னநாகபூண்டி கோ.குமார் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக அரக்கோணம் மக்களவை உறுப்பினர் திருத்தணி கோ.அரி, திருத்தணி எம்.எல்.ஏ. அருண்சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினர்.

    தொடர்ந்து 100 பயனாளிகளுக்கு கறவை மாடுகளும், அதேபோல் சகஸ்த பத்மாபுரம் கிராமத்தில் 23 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளும் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் தமிழக அரசின் தில்லி முன்னாள் சிறப்புப் பிரதிநிதி பி.எம்.நரசிம்மன், ஒன்றிய கவுன்சிலர்கள் மாணிக்கம், பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai