சுடச்சுட

    

    உள்ளாட்சி இடைத்தேர்தல்: ஒன்றியங்களில் வேட்புமனு தாக்கல்

    By திருவள்ளூர்  |   Published on : 04th September 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் செப்டம்பர் 18-ஆம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, அந்தந்த ஒன்றியங்களில் புதன்கிழமை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    திருவள்ளூர் ஒன்றியம்: திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள அரண்வாயல் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நிர்மலா வேலு ஈக்காட்டில் உள்ள திருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இந்த நிகழ்ச்சியின் போது, பூந்தமல்லி எம்.எல்.ஏ. மணிமாறன், ஒன்றியக் குழுப் பெருந்தலைவர் புட்லூர் ஆர்.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    கடம்பத்துôர் ஒன்றியம்: கடம்பத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஏற்கெனவே தலைவராக இருந்து இறந்த மகாலிங்கத்தின் மனைவி ராஜேஸ்வரி கடம்பத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இந்த நிகழ்ச்சியின்போது ஒன்றியக் குழுத் தலைவர் தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பூண்டி ஒன்றியம்: பூண்டி ஒன்றியத்துக்குள்பட்ட திருப்பாச்சூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, ஏற்கெனவே ஒன்றிய கவுன்சிலராக இருந்து இறந்த பாக்கியத்தின் மகள் சித்ரா வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இந்த நிகழ்ச்சியின்போது ஒன்றியக் குழு பெருந்தலைவர் அம்மு மாதவன், துணைத் தலைவர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த வேட்புமனு தாக்கலின்போது, அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிறுணியம் பலராமன், எம்.எல்.ஏ.க்கள் ரமணா, மணிமாறன், பொன்ராஜா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai