சுடச்சுட

    

    பெரியபாளையம் அருகே தடுப்புச் சுவரில் மோதிய லாரி

    By ஊத்துக்கோட்டை  |   Published on : 04th September 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊத்துக்கோட்டை அடுத்த பெரியபாளையம் அருகே எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி, நிலைத்தடுமாறி தடுப்புச் சுவரில் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது.

    கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து எரிவாயுவை ஏற்றிக் கொண்டு தமிழகத்தில் உள்ள மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்துக்கு டேங்கர் லாரி வந்துக் கொண்டு இருந்தது.

    லாரியை, திண்டுக்கல் மாவட்டம், புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அழகர் (35) என்பவர் ஓட்டி வந்தார்.

    லாரி, ஊத்துக்கோட்டை- சென்னை நெடுஞ்சாலையில் பெரியபாளையத்தை அடுத்த தண்டலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்துக் கொண்டு இருந்தபோது நிலைத்தடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் ஓட்டுநர் காயமின்றி தப்பினார். இதுகுறித்து தகலறிந்த பெரியபாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கிரேன் உதவியோடு லாரியை அப்புறப்படுத்தினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai