சுடச்சுட

  

  முன்னேற்றத்துக்கான வழி கல்வி மட்டுமே: ஆளுநர் கே.ரோசய்யா

  By திருவள்ளூர்,  |   Published on : 04th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கல்வி மட்டுமே ஒரு மனிதனின் முன்னேற்றத்துக்கான வழியாகும் என திருவள்ளூரில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளியின் 125-ஆவது ஆண்டு விழாவில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.

  திருவள்ளூரில் இயங்கி வரும் தர்மமூர்த்தி ராவ் பகதூர் கலவலக் கண்ணன் செட்டி மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவுக்கு, பள்ளியின் அறங்காவலர் குழுத் தலைவர் கண்ணையா தலைமை வகித்தார்.

  பள்ளித் தாளாளர் வெங்கடாச்சலம் வரவேற்றார்.

  இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆளுநர்

  கே. ரோசய்யா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் ஆளுநர் கே.ரோசய்யா பேசியது: "கல்வி மட்டுமே ஒரு மனிதனின் முன்னேற்றத்துக்கான வழியாகும்.

  அதன் அடிப்படையில் இந்தப் பள்ளி நிர்வாகத்தினர் கடந்த 125 ஆண்டுகளில் பல அறிஞர்களை உருவாகி இந்தச் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் அமர வைத்துள்ளனர்.

  இந்தச் சேவை மிகவும் மகத்தானது' என்றார்.

  தொடர்ந்து, பள்ளியின் 125-ஆம் ஆண்டு மலரை வெளியிட்டார்.

  இந்தப் பள்ளியில் பல ஆண்டுகளாக சிறப்பாகப் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

  இந்தப் பள்ளியில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

  ஆளுநர் ரோசய்யாவின் வருகையையொட்டி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

  ஆரிய வைசிய மகாசபை சார்பில் நினைவுப் பரிசு: தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவின் வருகையையொட்டி திருவள்ளூரில் ஆரிய வைசிய மகா சபை, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தான டிரஸ்ட், ஸ்ரீ வாசவி யூத் அசோசியேஷன் ஆகியவை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

  மேலும் மகா சபை நிர்வாகிகள் எஸ்.டி. சம்பத்ராஜா, மீனா சம்பத்ராஜா ஆகியோர் ஆளுநர் ரோசய்யாவுக்கு, தஞ்சை பெரியக் கோயிலின் உருவம் பொறித்த நாணயத்தை நினைவுப் பரிசாக வழங்கினர்.

  இந்த நிகழ்ச்சியின்போது, எம்.ஜி.முரளிகிருஷ்ணன், பி.குமரகுரு, வி.சதீஷ்குமார், பி.கே.பிரேம், கவுன்சிலர் துக்காராம், ஜி.சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai