Enable Javscript for better performance
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தவர் சாவு

    By பூந்தமல்லி,  |   Published on : 04th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போரூர் அருகே கொளப்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் பலத்த காயமடைந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

    போரூரை அடுத்த கெருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (45) கூலி வேலை செய்து வந்தார். கொளப்பாகம் பகுதியில் உள்ள தனது நண்பரைப் பார்ப்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கொளப்பாக்கம் அருகே சென்ற போது நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த சேகரை அருகில் இருந்தவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai