சுடச்சுட

  

  ரயில்வே கேட்டில் ஆட்டோ மோதி விபத்து:கேட் பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு

  By திருவள்ளூர்  |   Published on : 04th September 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடம்பத்தூர் ரயில்வே கேட்டில் ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டதன் காரணமாக ரயில்வே கேட் பழுதானதால் திருவள்ளூர்- பேரம்பாக்கம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  திருவள்ளூர் - பேரம்பாக்கம் சாலையில் உள்ளது கடம்பத்தூர் ரயில் நிலையம். இவ்வழியாக ரயில் வருவதையொட்டி காலை 9 மணியளவில் கேட் கீப்பர் அங்குள்ள தானியங்கி கேட்டை மூடினார்.

  அப்போது, திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் நோக்கி வேகமாக வந்த ஆட்டோ ரயில்வே கேட்டின் மீது மோதியது. இந்த விபத்தில் ரயில்வே கேட் பழுதானது.

  கடம்பத்தூரை சில ரயில்கள் கடந்த பின்னரும் கேட் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கேட்டபோது கேட்டில் பழுது ஏற்பட்டுள்ளதாக என கேட் கீப்பர் தெரிவித்தார்.

  அதற்குள் திருவள்ளூர், பேரம்பாக்கம் சாலையில் கார், லாரி, பேருந்து போன்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

  இதுகுறித்து தகவலறிந்ததும் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, ரயில்வே கேட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

  பின்னர் ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் ரயில்வே கேட்டில் பழுது நீக்கப்பட்டதால் அதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

  இதுபோல் அடிக்கடி நடைபெறும் சம்பவத்தால் பயணிகளும், பள்ளி மாணவர்களும் அவதிப்படுவதைத் தடுக்க அந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதுதான் ஒரே தீர்வு என வாகன ஓட்டிகள் கூறினர். இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து கேட்டை சேதப்படுத்திய ஆட்டோ ஓட்டுநரை விசாரித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai