சுடச்சுட

    

    போரூர் அருகே ரேஷன் கடையில் புதன்கிழமை மாலை ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை நந்தம்பாக்கம், ஐ.டி.பி.எல். காலனியைச் சேர்ந்தவர் தேவராஜ் (45). மாற்றுத் திறனாளி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் தேவராஜ் போரூர் அருகே மௌலிவாக்கம், ராஜகோபலபுரம் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார்.

    புதன்கிழமை மாலை பணி முடிந்ததும் கடையில் இருக்கும் பொருள்களின் இருப்புக் கணக்கை தேவராஜும், உதவியாளர் கண்ணனும் சரிபார்த்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் மாலை 6 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் ரேஷன் கடையினுள் புகுந்து தேவராஜை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

    இதில் தலை, கழுத்துப் பகுதியில் பலத்த காயமடைந்த தேவராஜ் அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாங்காடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து இறந்து கிடந்த தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai